Categories
தேசிய செய்திகள்

என்னது… ஊரடங்கில் செல்போன் பார்த்ததால்… இத்தனை பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டதா…? ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

கடந்த ஆண்டு ஊரடங்கில் இருந்து தற்போது வரை 27.5 கோடி பேருக்கு கண்பார்வையில் அதிகம் பாதிப்பு இருப்பதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உலகிலுள்ள பல நாடுகள் போராடி வருகின்றன. அதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து பொது முடக்கம் அமலில் இருந்தது. அதன் பிறகு சற்று தளர்வுகள் இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தது. பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமே வகுப்புகள் பயின்று வந்தனர். அதுமட்டுமில்லாமல் ஐடி ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரிவதால் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் முன்பே பகுதி நேரம் கழிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் பொழுதுபோக்கு செல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. வேலை , கல்வி. பொழுதுபோக்கு என்று நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் இந்தியாவில் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 27.5 கோடிப்பேருக்கு, அதாவது மக்கள் தொகையில் 23 சதவீதம் பேருக்கு கண் பார்வையில் சேதம் இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே செல்போன்களை அதிகளவில் பார்ப்பதால்தான் கண்பார்வையில் பாதிப்பு இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

Categories

Tech |