Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Vetrimaaran opens up about his movie with Suriya | Tamil Movie News - Times  of India

தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல் நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், ஞானவேல் ராஜா இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் சூர்யா- வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |