முகநூல் நிறுவனத்தில் இருக்கும் பிழையை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. இதனை மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெற்றுள்ளார்.
மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த கணினி பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் அறிவித்திருந்த போட்டியில் இவர் பங்கேற்றார். அதில் இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதில் உள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து புகைப்படங்கள், கதைகள், ரியல்ஸ் ஆகியவற்றை அவர்கள் பார்க்கும் வகையில் உள்ளது என்ற தொழில் நுட்ப குறைபாட்டை அவர் கண்டுபிடித்தார்.
இதையடுத்து கடந்த 15ஆம் தேதி முகநூல் நிறுவனம் அதனை சரி செய்து. பிறகு இந்த பிழையை சரியாக கண்டுபிடித்த இந்திய மாணவர் மயூருக்கு ரூபாய் 22 லட்சத்தை பரிசாக வழங்கி உள்ளது. மேலும் எதிர்காலத்திலும் இதுபோன்று தகவல்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.