உத்திரப்பிரதேச மாநிலம் கங்கை நதியில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அந்தப் பெட்டியில் என்ன இருக்கும் என்று எடுத்து பார்த்தபோது அதில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெட்டியில் பெண் குழந்தை ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. பெட்டியின் உள்ளே குழந்தையின் ஜாதகம், துர்க்கை படம் மற்றும் குழந்தையின் பெயர் கங்கை மகள் என எழுதப்பட்டிருந்தது. இதன்படி குழந்தை மே 25ஆம் தேதி பிறந்துள்ளது.இந்த குழந்தையை அரசே தத்தெடுத்து வளர்க்கும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் இந்த குழந்தையை யார் பெட்டியில் வைத்து அனுப்பியிருப்பார்கள் என்று விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
Categories