Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்-2’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?… வெளியான புதிய தகவல்…!!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

KGF 2: Yash starrer gets a release date | Entertainment News,The Indian  Express

மேலும் வருகிற ஜூலை 16-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள்  திறக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு 100 % இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்த பிறகு இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |