தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பு குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்து வருகிறது. அதன் காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை காணொலிக் காட்சி மூலமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து எம்பி எம்எல்ஏக்களுக்குஎதிரான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வழக்குகள் விரைந்து முடிக்கப்படும் என கூறியுள்ளது.