Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவில்ல கூட இப்படியா…? காலமே மாறி போச்சு… அடுத்தடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

மர்ம நபர்கள் 2 அம்மனின் திருமாங்கல்யத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ். வேலாயுதம்பாளையம் பகுதியில் மாரியம்மன் மற்றும் காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து மாரியம்மன் மற்றும் காமாட்சி அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தலா ஒரு பவுன் திருமாங்கல்யத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து பூஜை செய்வதற்காக காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின் அவர் உள்ளே சென்று பார்த்த போது அம்மனின் திருமாங்கல்யம் திருடு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் ஊர் பெரியவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அம்மனின் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |