சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்டவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில் மலைப் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சபடுவதாக ஆத்தூர் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று டிரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் முருகன் கோவில் ஓடை பகுதியில் 20 பேரல்களில் 4,500 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அங்கு லாரி டியூப்களில் கடத்துவதற்காக 1, 500 லிட்டர் சாராயம் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4, 500 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 1, 500 லிட்டர் சாராயம் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறல் போட்டவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.