Categories
மாநில செய்திகள்

யூடியூபர் மதனின் நண்பர்களுக்கும்… வரப்போகும் சிக்கல்….!!!

யூடியூபில் ஆபாசமாக பேசிய வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதனின் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமை நேரலையில் பப்ஜி விளையாடி வந்தார் மதன். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த சேனலில் நிர்வாகி என்பதால் நேற்று எந்திரம் கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கிருத்திகா உடன் அவரின் 8 மாத குழந்தையும் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தலைமறைவாக உள்ள மதனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இன்று காலை தலைமறைவாக இருந்த  மதனை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். மேலும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார். இந்நிலையில் அவரது வீடியோக்களை 20-க்கும் மேற்பட்ட நண்பர்கள் தங்களது யூடியூப் சேனலில் ஏற்றி அதன் மூலம் வருவாய் ஈட்டி உள்ளனர். இதனால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |