சென்னையில் சில ரயில்வே நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் ரூபாய் 50 வசூலிக்கப்பட்டு வருவது செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இதற்காக சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பை கருதி மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் ரூபாய் 50 என வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டண முறை செப்டம்பர் 16ஆம் தேதி நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.