தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சகத்தை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை என பெயர் மாற்றம் செய்து அதனை தொழில் துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாக அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. இன்னுயிர்த் தமிழை காக்க நடந்தேறிய மொழிப்போர் ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய திமுக தமிழ் மொழிக்காக இருக்கும் ஒரே அமைச்சகத்தை மெல்ல உருமாற்றி சிதைக்கும் வேலையில் ஈடுபடுவது பெரும் கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில்துறை அமைச்சருக்கு இதனை கூடுதல் பொறுப்பாக வழங்கியிருப்பது தமிழை அவமானப்படுத்தும் செயல் என்று அவர் கூறியுள்ளார். எனவே தமிழ் வளர்ச்சித் துறையை மீண்டும் தனித் துறையாக மாற்ற வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.