Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. இப்படியா பண்றீங்க…. வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை….!!

பேரணாம்பட்டு அருகில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடும் ஒரு கும்பல் காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்டு விற்க முயற்சி செய்வதாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனச்சரகர் சங்கரய்யா தலைமையில், வனவர்கள் ஹரி, மோகனவேல், தயாளன், வனக் காப்பாளர்கள் விஸ்வநாதன், காந்த குமார், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனப்பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் என்றும் பல்லலகுப்பம் விரிவு காப்புக்காட்டில் காட்டுப்பன்றி உட்பட பல்வேறு வன விலங்குகளை சுருக்கு கம்பி வலை வைத்து வேட்டையாடியது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

இந்த வலையில் சிக்கிய ஒரு ஆண் காட்டுப்பன்றியை பனை ஓலையால் தீயிட்டு சுட்டு, அதை கழுவி இறைச்சியை பங்கு போட்டு விற்க முயன்றதும் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அறிவாள்கள், காட்டுப்பன்றி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு காட்டுப்பன்றியை வேட்டையாடிய பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்த தரணி, ரமேஷ், தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேருக்கும் மாவட்ட வன அதிகாரி பார்கவ தேஜா உத்தரவின்படி தலா 8 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Categories

Tech |