நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து விதமான கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள், உரிமையாளர்கள் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால், அவர்களின் கடைகள், நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படாது என்று தொழிலாளர் துறை ஆணையர் சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.