நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதையடுத்து இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகை சாய்பல்லவி தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி, விராட பருவம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது .
இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மாரி-2 படத்தில் தனுஷ், சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்திருந்தனர் . மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.