நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது.
கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும், மதிப்பெண் மதிப்பீட்டு முறையைக் கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வட கிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 31-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.