அசாமின் சோனித்பூரில் இன்று(ஜூன்-18) அதிகாலை 2.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இந்நிலையில் மீண்டும் மதியம் 12.42 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.8 ஆக பதிவானது. இதுதவிர மேகாலயாவில் 4:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மணிப்பூரிலும் ரிக்டரில் 3.0 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Categories