Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டவர்களுக்கு தளர்வா..? பிரித்தானிய பிரதமர் பரபரப்பு பேட்டி… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து செய்தி தொடர்பாளர் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு மிக கடுமையாக உள்ள நாடுகள் சிவப்பு பட்டியலிலும், ஆபத்தாக கருதப்படும் நாடுகள் அம்பர் பட்டியலிலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகள் பச்சை நிற பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் அந்தந்த நிறத்தைப் பொறுத்து கட்டுப்பாடுகளும் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்ட பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்துவது, அவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

மேலும் மக்கள் அனைவரும் வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தவுடன் மீண்டும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும், தற்போதைய பிரித்தானிய அரசின் அணுகுமுறையானது சரி என்றும், தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |