தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாரே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று முதல் 10 நாட்களுக்கு மின்தடை இருக்கும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். அதன்படி சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை சில இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாபிராம், திருமுல்லைவாயில், மணலி புதுநகர், மேலூர் பகுதி, அடையார் பேசண்ட், அடையார் சாஸ்திரி நகர், வேளச்சேரி மேற்கு, மையம் வேளச்சேரி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு இருக்கும் என கூறப்படுகிறது.