Categories
தேசிய செய்திகள்

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி…? என்னென்ன ஆவணங்கள் தேவை…??

ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அட்டை மூலம் பொதுமக்களுக்கு அரசு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்று பார்க்கலாம்.

விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

குடும்ப தலைவரின் ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள், குடும்பத் தலைவரின் புகைப்படம், வயதிற்கான குழந்தையின் பிறப்பு சான்றிதழ், நிரந்தர தொலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதாவது ஒன்று.

முதலில் புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க http://www .tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்ட  அளவில் விண்ணப்பிப்பவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் தொடர்ந்து கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்பிப்பவர் தன்னிடம் உள்ள ஆவணங்களை முன்னரே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். ஸ்டார் குறி இடப்பட்ட அனைத்து தரவுகளையும் பதிவு செய்யவும். இதையடுத்து சமர்ப்பிக்கும் பட்டனை அழுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். இதை அடுத்து விண்ணப்பிப்பவரின் மொபைல் நம்பருக்கு குறிப்பு எண் ஒன்று வரும். அதை வைத்து மீண்டும் முன் பக்கத்திற்கு சென்று உங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |