இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளையும், மானியம் உள்ளிட்ட பல அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு கொடுக்கப்படும் மானிய தொகையை 50 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து ஆம்பியர் நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையில் 9000 ரூபாய் குறைத்துள்ளது. அதன்படி, ஆம்பியர் ஜீல் ஸ்கூட்டரின் விலை 68,990 ரூபாயில் இருந்து 59,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஆம்பியர் நிறுவனத்தின் இந்த விலைக் குறைப்பின் காரணமாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பயன் அடைவார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.