Categories
தேசிய செய்திகள்

இலவச பரிசு கொடுக்குறாங்களா…? வேண்டாம் பிரச்சினைல மாட்டிக்காதீங்க…. எஸ்பிஐ எச்சரிக்கை…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு பரிசளிப்பதாக கூறி சில மோசடிக் கும்பல்கள் ஏமாற்றுவேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை நம்பி வாடிக்கையாளர்களின் ஒரு சிலர் ஏமாந்து விடுகிறார்கள். இல்லாத ஒரு வங்கியின் பெயரை குறிப்பிட்டு, அந்த வங்கியின் மூலம் இலவச பரிசுகள் கொடுப்பதாகவும் பொய்களைச் சொல்லி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி அதன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இதுபோன்ற பரிசுகள் வழங்குவதாக கூறி பணத்தை திருடும் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம் எனவும், குறுந்தகவல் அல்லது இ-மெயில் மூலமாக வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எஸ்பிஐ அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |