Categories
டெக்னாலஜி

சாதி சான்றிதழ் வேண்டுமா…? செல்போன்ல கூட ஈஸியா விண்ணப்பிக்கலாம்… வாங்க பாக்கலாம்…!!!

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். அதை ஆன்லைனிலேயே எப்படி ஈசியாக வாங்குவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

தேவையான ஆவணங்கள்:

குழந்தையின் ஆதார் அட்டை ,

தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை,

குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ,

குடும்ப அட்டை,

மாற்றுச் சான்றிதழ்,

பெற்றோரின் இனச் சான்று.

புகைப்படம்.

விண்ணப்பிக்கும் முறை

முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சிட்டிசன் லாகின் ஆப்ஷன் மூலம் உள்நுழைய வேண்டும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய பயனர் ஆப்ஷனை தேர்வு செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைக் கொடுக்கவேண்டும்.

அப்போது உங்கள் தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அவற்றைக் கொண்டு நீங்கள் இணையதளத்திற்குள் லாகின் செய்யவேண்டும். பின்னர் Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் பெய்து Community Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படித்து விட்டு Proceed பட்டணை கிளிக் செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் முடித்த பிறகு Register CAN என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அப்போது நீங்கள் பதிவு செய்த எண்ணிற்கு CAN Registration Number Message-ஆக வரும். அதை CAN Register கட்டத்தில் பதிவிட வேண்டும். மீண்டும் உங்கள் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அவற்றை உள்ளிட்டு Proceed ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் பதிவேற்றம் செய்த உங்களது விவரங்கள் வரும். அவற்றை சப்மிட் செய்யவேண்டும். பின்னர் கேட்கப்படும் ஆவணங்களை {மேலே குறிப்பிடபட்ட தேவையான ஆவணங்கள்} ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.
பின்னர் ஒரு Self Declaration Form வரும் அதனை பிரிண்ட் செய்து ஒப்பிட்டு மீண்டும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

பின்னர் சான்றிதழ் பெறுவதற்கு அரசு நிர்ணயித்துள்ள ரூ.60 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். உங்களது ஆவணங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின்னர் உங்களது தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும்.

அதனையடுத்து இதே இணையதளத்தில் உங்களது பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைந்து சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Categories

Tech |