இந்திய விளையாட்டுத் துறையின் மிகப்பெரிய ஜாம்பவான் மற்றும் பிரபல தடகள வீரர் ஆன மில்கா சிங் கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவால் போராடி வந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்துசிகிச்சைக்கு பின்னர் ஓரளவிற்கு கொரோனாவிலிருந்து மீண்டார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறி இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு காலமானார். இவர் நாட்டின் முதல் டிராக் அன்ட் பீல்டு சூப்பர் ஸ்டார் ஆவர். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.