நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் நேற்று இரவு 7 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 21ஆம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.