Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட ஆர்வம்…. நேற்று இரவு முதலே மக்கள் காத்திருப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பு மையங்கள் தொடங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோட்டில் இன்று கொரோனா தடுப்பூசி போட இருக்கும் நிலையில் நேற்று இரவு முதலே ஆர்வத்துடன் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். மேலும் தங்களுடைய உறவினர்களுக்காக கற்களை வைத்து இடம் பிடித்தனர்.

 

Categories

Tech |