கால்நடைகளை திருடி சென்ற குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சொந்தமான மூன்று கால்நடைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து இதுபற்றி ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கால்நடைகளை திருடிய குற்றத்திற்காக கரடிசித்தூர் பகுதியில் வசிக்கும் விக்ரம் மற்றும் ராகுல், 18 வயது இளைஞன் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மூன்று கால்நடைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.