Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

லாரியில் இதுதான் இருக்கா…? மடக்கி பிடித்த அதிகாரிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்கு முயற்சி செய்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி தலைமையில், அதிகாரிகள் பச்சூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் லாரியில் ரேஷன் அரிசி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்திற்கு 4 டன் ரேஷன் அரிசியை கடத்துவதற்கு முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |