அஜித்குமார் நடிக்க இருக்கும் “தல60” படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார் .
ஹச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் , அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாகும்,
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் அஜித்தின் விருப்பத்திற்குரிய ஸ்போர்ட்ஸ் மற்றும் ரேஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என போனிகபூர் கூறியிருந்தார். இதன்பின் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .
ஆனால், அவர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் , அவர் ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது. தற்போது, அவர் ‘அஜித் 60’ படத்தில் நடிக்க ஓப்புக் கொண்டுள்ளார். இந்த படம் அவரின் முதல் தமிழ் படமாகும் .