Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு கீழ் வேலை பார்க்க மாட்டோம்…. துப்புரவு பணியாளர்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் 90-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே நகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் உமா சங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை வேலை வாங்கி வருகின்றனர். அவர்கள் சொல்லும் வேலைகளை துப்புரவு பணியாளர்களும் செய்து வருகின்றனர். இதனையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் துப்புரவு பணியாளர்கள் தனது வேலைகளை நிறுத்திவிட்டு ஜங்ஷன் பேருந்து நிறுத்தத்தில் மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி 90-க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் தி.மு.க நகர செயலாளருமான ம. அன்பழகன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி.எஸ் பெரியார்தாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் ஆணையாளர் ராமஜெயம் துப்புரவு பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிருந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது துப்புரவு பணியாளர்கள் சுகாதார ஆய்வாளர் உமா சங்கர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களின் கீழ் நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்றும் அவர்களை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆணையாளர் ராமஜெயம் துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் இனி உங்களிடம் வேலை சொல்ல மாட்டார் என்றும் பணியாற்றும் ஒருவரை நீங்களே மேற்பார்வையாளராக நியமித்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதன்பின் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பி.எம் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், தினசரி கூலி உயர்வு வழங்கி, நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என ஆணையாளர் ராமஜெயம் கூறியுள்ளார்.

Categories

Tech |