லாரி நிலைதடுமாறியதால் சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் வழியாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் இருந்து லாரி மூலமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு கோதுமை பாரம் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர். இந்த லாரியை தேனி மாவட்டத்தில் வசிக்கும் ஜெகதீஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் மாற்று ஓட்டுநர் ஈஸ்வரன் இருந்துள்ளார். இதனை அடுத்து லாரி தேசிய நெடுஞ்சாலை இரட்டைப் பாலம் வழியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது.
அப்போது லாரியின் முன்பாக சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நிலைதடுமாறி கொண்டிருந்த லாரியில் இருந்த ஓட்டுனர் ஜெகதீஷும், மாற்று ஓட்டுனர் ஈஸ்வரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தால் லாரியின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது விபத்தில் உயிரிழந்தவர்கள் வேப்பமரத்து ஊரில் வசிக்கும் ஈஸ்வரன், சவாமிநாதன், செல்வராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் ராஜி என்பது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.