தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டம் முழுவதிலும் சுமார் 766 பள்ளிகள் உள்ளன. அதில் 530 அரசு பள்ளிகள், 236 அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதனையடுத்து அரசு பள்ளிகளில் 1,35,527 மாணவ மாணவிகள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து அவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் பள்ளி கல்வி துறை அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகப்படும் என கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு என்பதால் ஒரு நாளில் குறிப்பிட எண்ணிக்கையில் மாணவர்களை வரவழைத்து அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.