பத்து வருட உழைப்பிற்கு பிறகு பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மிக பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் புதிய அறக்கட்டளை மையம் ஒன்றை குழந்தைகளின் நலனுக்காக தொடங்கியுள்ளார். இளவரசி கேட் மிடில்டன் புதிய அறக்கட்டளை மையமான The Royal Foundation Centre for Early அறக்கட்டளையை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வருங்கால வாழ்க்கையை ஆரம்பத்திலேயே வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல் 5 வருடங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலை தான் அவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் “குழந்தைகள் சிறந்த நடைமுறையை பகிர்ந்து கொள்வதற்கும், அறிவை அதிகரிப்பதற்கும், உயர்தர ஆராய்ச்சியை ஊக்குவித்தல், ஆணையிடுதல் ஆகியவற்றிற்காக பொது, தனியார் மற்றும் தன்னார்வ துறைகளை சேர்ந்தவர்களுடன் புதிய தீர்வுகளில் ஒத்துழைக்க இந்த மையம் உதவி செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளின் செயலை ஊக்குவிப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆக்கப்பூர்வமான பிரச்சாரங்கள் நேர்மையான மற்றும் உண்மையான மாற்றத்தை குழந்தைகளின் மனதில் ஆரம்பத்திலேயே உருவாக்கும் என்று கூறியுள்ளார். மேலும் வருங்கால பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களை இந்த குழந்தைகளை வடிவமைப்பதன் மூலம் உருவாக்குகிறோம்” என்றும் கூறியுள்ளார்.