செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், கருங்குழி, அச்சரபாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசால் கொடுக்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் பொதுமக்களுக்கு சரியான முறையில் விநியோகம் நடைபெறுகிறதா என்று நுகர்பொருள் கூட்டுறவு கூடுதல் செயலாளர் முகமது நசிமுத்தீன், மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு மதுராந்தகம் ஆர்.டி.ஓ. சரஸ்வதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட நுகர்பொருள் வருவாய் அலுவலர் சீதா ஆகியோர் அவருடன் இருந்தனர். இதனையடுத்து கலெக்டர் ராகுல் நாத் அந்தப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் மையங்களை பார்வையிட்டுள்ளார். அப்போது நகராட்சி ஆணையர் நாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.