Categories
டெக்னாலஜி

அசராமல் முதல் இடத்தில்…. கெத்தாக இருக்கும் ஜியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தின் சிம்களை  பயன்படுத்தி வருகின்றனர். ஜியோ நிறுவனம் பல சலுகைகளையும் அறிவிப்புகளையும் தனது  வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கின்றது. அந்த நிறுவனத்தின் சிம்களை அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ஜியோவுக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 42.29 கோடியாக உயர்ந்தது. இதையடுத்து இந்திய தொலைதொடர்புத் துறையில் புதிய மைல்கல்லை ஜியோ தொட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியான இடத்தை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 35.23 கோடியாகவும், வோடா போன்- ஐடியா வாடிக்கையாளர் எண்ணிக்கை 28.37 கோடியாகவும்  உயர்ந்துள்ளது.

Categories

Tech |