ஆம்பூரில் அருகில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவலாபுரம் பகுதியில் கோபி- சிந்தனா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகின்றது. இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சிந்தனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிந்தனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சிந்தனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.