ஆசிய போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் பல தங்கப் பதக்கங்களை குவித்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மரணம் எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் ஆகச் சிறந்த தடகள வீரர் என்று புகழ்ந்த ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி சாதனைகளை படைத்த மில்கா சிங்கின் வாழ்க்கை பல இந்திய இளைஞர்களுக்கு ஊக்குவிக்கும் ஒன்றாக அமைகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.