நெதர்லாந்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 26-ஆம் தேதி முதல் தளர்த்தப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நெதர்லாந்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அந்நாட்டு அரசு வருகின்ற 26-ஆம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்த முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் மார்க் ரட்டே 1.5 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை தவிர பிற கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி வருகின்ற 26-ஆம் தேதி முதல் கடைகளை மூடுவதற்கான நேரம் வரையறுக்கப்படாது, எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது, கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களை பரிசோதித்த பிறகு இரவு நேர கிளப்களும் செயல்படலாம், மதுபானத்திற்கு தடை இல்லை உள்ளிட்டவை அமலுக்கு வருகிறது. அதேபோல் கொரோனா செக் செயலியை பின்பற்றி அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றில் கூடுதல் நபர்களை அனுமதித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.