Categories
தேசிய செய்திகள்

கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா…? ஒரே மேடையில் 2 காதலிகள்… குடுத்து வச்ச மணமகன்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் செய்து குடும்பம் நடத்துவதே பெரிய விஷயமாக இருக்கின்றது. இதில் இரண்டு திருமணம் செய்து குடும்பம் நடத்தினால் அவ்வளவுதான். ஆனால் இதையும் மீறி நபரொருவர் இரண்டு திருமணத்தை ஒரே மேடையில் செய்துள்ளார். ஆம்! தெலுங்கானாவில் சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன். இவர் தன்னுடைய மாமன் மகள் இருவரையும் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து ஒரே மேடையில் இருவரையும் திருமணம் செய்து கொண்டார்.

வேலையில்லாமல் இருந்த அர்ஜுன் செல்போன் மூலமாக தன்னுடைய மாமன் மகள்கள் கனகா மற்றும் சுரேகா இருவரையும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுடைய விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அர்ஜுன் சாமர்த்தியமாக பேசி சம்மதிக்க வைத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவருக்கும் ஒரே நேரத்தில் தாலி கட்டினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |