ஜான்வி கபூர் கரண் ஜோகர் தயாரிப்பில் பெண்மணி ஒருவரின் வரலாற்று கதையில் நடித்துள்ளார் .
மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். இவர் நடித்த முதல் படம் “தடக்” ஆகும் . இப்படத்திற்கு பின்பு ‘தடக்’ படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோகர் தயாரிப்பில் ஜான்வி கபூர் மீண்டும் நடிக்க உள்ளார் . மேலும் , ’குஞ்ஜன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த படம் குஞ்சன் என்பவரின் வாழ்கை வரலாறு கதையாகும் . இதில் பெண் ராணுவ பைலட்டான குஞ்சன் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளது என தெரியவந்துள்ளது . இந்த குஞ்சன் என்பவர் குஞ்ஜன் சக்சேனா கார்கில் போர் சமயத்தில் காயம்பட்ட எண்ணற்ற இந்திய ராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக இடம் மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் .
மேலும் , சவுர்ய சக்ரா விருது பெற்ற முதல் பெண்மணியும் இவரே ஆவார். இந்த படம் ‘குஞ்ஜன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’போர் நடந்த , மார்ச் 13, 2020 அன்று வெளியாக உள்ளது . இந்த படத்துக்காக ஜான்வி தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டதோடு 6 கிலோ எடையையும் குறைத்துள்ளார்.