Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படிலாமா யோசிப்பாங்க… வீட்டையே அபகரித்த கும்பல்… முதியவரின் பரபரப்பு புகார்…!!

பிரதமர் திட்டத்தின் கீழ் மானியம் வாங்கி தருவதாக முதியவரின் வீட்டை அபகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் மசாக் கவுண்டர் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு நான்கு சென்ட் இடத்தில் சொந்தமாக வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் திட்டத்தில் 2 லட்ச ரூபாய் மானியமாக பெற்றுக்கொள்ளலாம் என அதே பகுதியில் வசிக்கும் ஆரோக்கிய சார்லஸ் மற்றும் சுதா ஆகிய இருவரும் முதியவரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டின் பத்திரத்தை தனது பெயரில் பவர் ஆவணம் எழுதி கொடுக்க வேண்டும் என அந்த முதியவரிடம் ஆரோக்கிய சார்லஸ் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அந்த முதியவர் ஆரோக்கிய சார்லஸின் பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்தவுடன், அவர் சுதாவின் பெயருக்கு வீட்டை மாற்றி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மசாக் கவுண்டர் இது குறித்து உடனடியாக கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆரோக்கிய சார்லஸ் மற்றும் சுதா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் இவர்களுடன் செந்தில், ராமமூர்த்தி, சரவணன், வேல் ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்த 4 பேரையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |