ஆசிய போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் பல தங்கப் பதக்கங்களை குவித்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் தடகள வீரர் பிடி உஷா தனது முன்னோடியான மில்கா சிங் கொரோனா காரணமாக மரணமடைந்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவருடைய உறுதியும் கடின உழைப்பும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் அவர் நடத்தும் உஷா பள்ளியில் இன்று அதிகாலை மறைந்த மில்கா சிங்கிற்கு மரியாதை செலுத்தப்பட்டது.