Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஜூலை-1க்குள்…. அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தடுப்பூசி போட்டுகொண்டு, அதனுடைய முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் அரசு ஊழியர்கள், முன்கள  பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் தடுப்பூசி போடுவது அதிகரிப்பதால் தடுப்பூசி திருவிழா 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |