தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி உணவகங்களில் பார்சல் சேவை வழங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் உணவகங்கள், மளிகை மற்றும் பேக்கரி கடைகளில் பார்சல் செய்யும் கவர்களை எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பரவும் ஆபத்து என்று என கடை உரிமையாளர் ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.