சட்டவிரோதமாக மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் காவல்துறையினர் மூலக்கொல்லை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அவர்களிடம் 250 கிராம் கஞ்சா கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வள்ளலார் பாரதிநகர், சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த 17, 18 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 3 பேரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.