Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 3 நாட்களிலேயே… முதல் மனைவியை பார்க்க சென்றவர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கணவர் முதல் மனைவியை சந்திக்க சென்றதால் இளம்பெண் திருமணம் முடிந்த 3 நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமிக்கு அமுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அமுதா கணவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதனையடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜக்கார் பாளையம் பகுதியில் வசிக்கும் அம்சவேணி என்ற பெண்ணுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து  அவருக்கு திருமணம் ஆனதை அறிந்த பிறகும் அம்சவேணி தனது பெற்றோருக்கு தெரியாமல் ஒரு கோவிலில் வைத்து கருப்பசாமியை திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்த அம்சவேணியின் பெற்றோர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்வது தவறு என்றும், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பின்னர் அம்சவேணியுடன் குடும்பம் நடத்துங்கள் என்றும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கருப்பசாமி தனது முதல் மனைவியிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதற்காக திண்டுக்கல் சென்ற சமயத்தில் தனது கணவர் மீண்டும் திரும்பி வருவாரா வரமாட்டாரா என்று சந்தேகத்தில் இருந்த அம்சவேணி தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து அம்சவேணி மயங்கி விட்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |