Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 500 கிலோ எடை… வியாபாரிக்கு நடந்த விபரீதம்… கோவையில் பரபரப்பு…!!

ஹோட்டலின் பெயர் பலகை சரிந்து விழுந்ததால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணுவாய் பாளையம் பகுதியில் கனகராஜ் என்பவர் வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையை செல்வம் என்பவர் வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த கடையின் முன்பு 500 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பி மூலம் ஹோட்டலின் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஹோட்டலின் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகே வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென அந்த பெயர் பலகை சரிந்து கீழே விழுந்து விட்டது.

இதனால் அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த செல்வராஜ், அவரது மனைவி மற்றும் பொன்னம்மாள் என்ற மூதாட்டி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள்  அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |