சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியாரூர் சோதனை சாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற காரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரில் மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அங்கலக்குறிச்சி பகுதியில் வசிக்கும் தங்க துரை என்பதும், திண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க துரையை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 70 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.