இரண்டு காட்டு யானைகள் சாலையில் சுற்றி திரிந்ததை பார்த்ததும் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் காலை 6 மணி அளவில் இரண்டு காட்டு யானைகள் நடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் சாலையில் நின்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்து விட்டு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் நுழைந்து விட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது காட்டுயானைகள் எந்த நேரத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.