Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரயில்வே மேம்பாலம் அமைக்க…. இவ்வளவு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு….!!

 ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பகுதியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர் .

வேலூர் மாவட்டத்திலுள்ள கரசமங்கலம் கிராமத்தில் இருந்து பேரூர் செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் இருக்கின்றது. இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு நில ஆர்ஜிதம் செய்ய 2 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காட்பாடியில் நில உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் பாலமுருகன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து மேம்பாலம் அமைக்க உள்ள இடம் மற்றும் அதுகுறித்த வரைபடத்தை வைத்து சம்பவ இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |