புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும், சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான வெங்கடேஷ் பாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு மிகவும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பெண் வீட்டில் 100 பவுன் நகை சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். கணவன் வெங்கடேஷ்க்கு அதிக அளவு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரையும் மது குடிக்க சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் காரணமாகவே இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
ஒரு கட்டத்திற்கு மேல் டார்ச்சரை தாங்க முடியாத ரேவதி அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அந்த புகாரில் தனது கணவர் என் தந்தை பெயரில் உள்ள வீட்டை அவரின் பெயரில் எழுதி வைக்குமாறு கொடுமை படுத்துவதாகவும், மது அருந்தச் சொல்லி வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது கணவர் வெங்கடேஷ் பாபுவை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றார்.